/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய மண்ணை ரோட்டில் போட்டதால் போக்குவரத்திற்கு சிக்கல்

ADDED : ஜன 02, 2025 04:42 AM

காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையில் நரிக்குடி ரோட்டில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மண்ணை ரோட்டில் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சம் உள்ளது. விரைந்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி மந்திரிஓடையில் நரிக்குடி ரோட்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.
தோண்டும் போது ரோட்டை சேதப்படுத்துவதுடன் பள்ளம் தோண்டி வெளியாகும் மண்ணை தார் ரோட்டில் கொட்டுகின்றனர். இதனை உடனடியாக மூடாமல் பல நாட்களாக கிடப்பில் போடுகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலான இடங்களில் பள்ளத்தை மூடாமல் கண்டும் காணாமல் கிடப்பில் போட்டனர். விபத்து அச்சத்தில் இருப்பதால் ரோட்டில் கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.