ADDED : டிச 16, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் அனைத்து பி.டி.ஓ.,க்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: காற்று மாசுபாடு, அது சார்ந்த நிலைகளில் உயிரிழக்கக் கூடியவர்களில் 65 வயதுக்கு கீழே மரணமடைக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தொடுகிறது.
திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இதற்குப் பின்பு இருக்கும் அறிவியலையும், சமூகப் பொருளாதாரத்தையும், எளிய மனிதர்களின் உடல் நலத்தையும் புரிந்திருக்கிறோமா என்பதை எடுத்துக் கூறும் நோக்கில் தான் இந்த பயிற்சி, என்றார். மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் ராமராஜ், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

