UPDATED : அக் 27, 2026 07:41 PM
ADDED : அக் 27, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சி.ஐ.டி.யு., சார்பில் மின்சார பஸ்களை அரசே இயக்குதல், காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புதல், பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை வழங்குதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல பொதுச்செயலாளர் போஸ், மத்திய சங்க உதவி தலைவர் வேலுச்சாமி, மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை, மண்டல பொருளாளர் முத்தமிழ் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
