/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட இருவர் பலி
/
இருவேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட இருவர் பலி
ADDED : செப் 27, 2025 03:48 AM
ராஜபாளையம்: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வடுகபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் பாரதிராஜா 19, ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்துார் கல்குவாரியில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சிமென்ட் லாரியின் பின்பக்கம் மோதியதில் தலையில் பலத்த காயம்பட்டு (ஹெல்மெட் அணியவில்லை) உயிர் இழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்
ராஜபாளையம் அருகே நகனேரியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் மகன் சுந்தர வைரலிங்கம் 15, அதே கிராமத்தை சேர்ந்த முகிலன் மகன் ஆல்வின் குமார் 15, இருவரும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் மதியம் 1:45 மணிக்கு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் சுந்தர வைரலிங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். (ஹெல்மெட் அணியவில்லை) ஓட்டி வந்த ஆல்வின் குமார் பலத்த காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.