/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகைக்காக மூதாட்டி கொலை மாணவர்கள் இருவர் கைது
/
நகைக்காக மூதாட்டி கொலை மாணவர்கள் இருவர் கைது
ADDED : டிச 30, 2024 01:01 AM
அருப்புக்கோட்டை: விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 68. இவர் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் நவம்பரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. பந்தல்குடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராமத்தில் கோயில் பகுதியில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த 2 சிறுவர்கள் இவர்களை பார்த்து ஓடினர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த 16, 17 வயது மாணவர்கள் என்பதும், குடி போதையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர்.- - -

