/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது
/
கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது
ADDED : செப் 20, 2024 02:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம் நலகொண்டாவைச் சேர்ந்தவர் ராஜா விக்ரம் ஆதித்யா ரெட்டி 20. பீஹார் மாநிலம் அரோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகித் குமார் 21.
இருவரும் விருதுநகர்மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் கல்லுாரியில் பி.டெக். படித்து வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை கிருஷ்ணன் கோவில் எஸ்.ஐ. ராமநாதன், அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 500 கிராம் கஞ்சா இருந்ததும், இதனை பீஹாரில் இருந்து கடத்திக் கொண்டு வந்து கிருஷ்ணன்கோவில் பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.