/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேட்பாரற்று கிடக்கும் டூவீலர்கள்
/
கேட்பாரற்று கிடக்கும் டூவீலர்கள்
ADDED : பிப் 21, 2024 05:25 AM
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் அடிக்கடி கேட்பாரற்று கிடக்கும் டூவீலர்கள் குறித்து பே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் டூவீலர்கள் அடிக்கடி திருட்டு நடக்கிறது. அதேபோல் மற்ற மாவட்டங்களிலிருந்து டூவீலர்களை திருடி விட்டு தப்பிச்செல்ல காரியாபட்டி பகுதிக்கு வருகின்றனர். பெட்ரோல் தீர்ந்து போனாலோ, போலீசார் நடமாட்டம் இருப்பதைக் கண்டு அச்சத்தினாலோ ஆங்காங்கே போட்டு விட்டு தப்பிச் செல்கின்றனர்.
மறுபடியும் டூவீலர்களை எடுக்க வந்தால் மாட்டிக் கொள்வோம் என்கிற பயத்தில் திரும்ப வருவதில்லை. அது போன்று காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக கிடந்த 6 டூவீலர்களை காரியாபட்டி போலீசார் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர். டூவீலர்களை கேட்டு யாரும் வராததால் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

