/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு --மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே
/
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு --மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு --மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு --மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே
ADDED : மார் 20, 2025 06:44 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளில் இணைப்புகள் குறித்து ஆர்.சி.எஸ் அமைப்பு, நகராட்சி சார்பில் டிஜிட்டல் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.
நகராட்சியில் மாஸ்டர் பிளான், கார்பன் நியூட்ரல்திட்டங்களின் படி நீர்நிலைகளை துாய்மையாக பராமரிப்பது குறித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுகள் எடுக்கும் பணி ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் மூலம் பள்ளி கல்லுாரி மாணவர்களை கொண்டு அலைபேசி ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மாநில பசுமை காலநிலை ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா துவக்கினார். பி.ஏ. சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, டாக்டர் சித்ரா மாணவர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
வீடுகளுக்கு நேரடியாகசென்று கட்டடத்தின் வகைப்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளதா, இல்லையெனில் அதற்கான காரணம், ஆழ்துளைகுழாய் இணைப்பு உள்ளதா, பொது கழிப்பறை பயன்படுத்துகிறீர்களா உள்ளிட்ட 14 வகையான கேள்விகளுடன் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப்பதன் மூலம் பராமரிப்பு பணிகளில் துல்லியமான தரவுகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.