/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்திரப்பட்டி கண்மாயில் பழுதான மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
/
சத்திரப்பட்டி கண்மாயில் பழுதான மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
சத்திரப்பட்டி கண்மாயில் பழுதான மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
சத்திரப்பட்டி கண்மாயில் பழுதான மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2025 01:55 AM
சாத்துார்: சாத்துார் சத்திரப் பட்டி கண்மாயின் பழுதான மதகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர்.
சத்திரப்பட்டி கண்மாய் மூலம் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இக்காண் மாய்க்கு சடையம்பட்டி கண்மாயில் இருந்தும் ஒ. மேட்டுப் பட்டி ஊராட்சியில் இருந்தும் நீர் வரத்துக் கால்வாய்கள் உள்ளன.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்தக் கண்மாயில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவிற்கு குடி மராமத்து பணி நடந்தது. இக்கண்மாயில் உள்ள 3 மதகுகளும் சீரமைக்கப்படாத நிலையில் தற்போது கண்மாய்க்கு அதிக மழை பெய்து தண்ணீர் வந்த போதும் மதகுகள் சீரமைக்காததால் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேறி விடுகிறது.
இந்த தண்ணீர் முழுவதும் பெரிய கொல்லப்பட்டி கண்மாய்க்கு சென்று அடைகிறது. இதனால் சத்திரப்பட்டி கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு கண்மாய் நிரம்பிய நிலையில் நெல் பயிர் செய்தும் தண்ணீர்வீணாக வெளியேறியதால் தண்ணீரை நிறுத்தி வைத்து தேவையான போது திறந்து பாசனம் செய்ய முடியாத நிலையில் இந்தப் பகுதி நெல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பழுதான மதகுகளை சீரமைப்பதோடு பாசன கால்வாயும் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.