தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : மார் 16, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம் : ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளரரை கண்டித்து ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபாளையம் தெற்கு வெங்கா நல்லுார் ஊராட்சி உட்பட்ட முதுகுடியில் மூன்று மாதங்களுக்கு முன் சமுதாய கூடம் கட்டுவதற்கு ஒரு தரப்பினர் முயற்சி செய்தனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர் அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு என தெரிந்தது.

இந்நிலையில் கட்டடம் கட்ட முயன்றவர்கள் மீது குற்றப் புகார் அளிக்க ஆர்.டி.ஓ., வின் நேர்முக உதவியாளர் ராமதாஸ் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., மணிகண்டன் மீது அழுத்தம் கொடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மறுப்பு தெரிவித்தவர் மீது 17 ஏ விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராஜபாளையம் ஒன்றியத்தில் பணிபுரியும் 32 வி.ஏ.ஓ.,க்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us