தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தரைபாலத்தில் வளைந்து போன இரும்பு வலைகள் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

தரைபாலத்தில் வளைந்து போன இரும்பு வலைகள் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

தரைபாலத்தில் வளைந்து போன இரும்பு வலைகள் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்


UPDATED : நவ 16, 2026 05:14 PM

ADDED : நவ 16, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:14 PM ADDED : நவ 16, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள தரை பாலம் நடுவில் போடப்பட்ட இரும்பு வலைகள் வளைந்து போனதால் வாகனங்கள் தொடர் விபத்திற்குள்ளாகின்றன.

அருப்புக்கோட்டையில் புதுக்கடை பஜார், எஸ்.பி.கே., பள்ளி ரோடு, பழைய தேவாங்கர் கல்லூரி ரோடு சந்திக்கும் பகுதியில்தரை பாலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய தரைப்பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வரத்து ஓடை செல்வதால், மழைக்காலத்தில் ஓடையில் வரும் குப்பையை அகற்றுவதற்கு பாலத்தின் நடுவே இடைவெளி விடப்பட்டது. இதற்கு இரும்பிலான கம்பி வலை அமைக்கப்பட்டது.

சில மாதங்களிலேயே கம்பி வலை வளைந்து போனது. பாலத்தின் நடு பகுதியில் கம்பி வளைந்து போனதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்பவர்கள் இரவு நேரங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. பாலத்தில் உறுதியான கம்பி வலை அல்லது கான்கிரீட் மூடி கொண்டு மூட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us