/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு
/
பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு
பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு
பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 15, 2011 09:19 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : பிள்ளையார்நத்தம் பகுதியில் காட்டுபன்றிகள் தொல்லையால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் , பூவாணி, தொட்டியப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், கிரேந்திப்பூ போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். கிணற்று நீரைகொண்டு விவசாயம் செய்கின்றனர்.தற்போது வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. மான்கள்,காட்டு பன்றிகள் தண்ணீருக்காக விவசாய நிலங்களில் புகுந்து தண்ணீர் குழாய் , பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
இதை தடுக்க, வனப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தொட்டி மூலம் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .விவசாயி அய்யனார் கூறியதாவது: மழை இல்லாததால் கிணற்று நீரை கொண்டு கிரேந்தி, தக்காளி நடவு செய்துள்ளேன். அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. மான், காட்டு பன்றிகள் வயல்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.