/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க முயற்சி எடுப்பேன்
/
அரசு திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க முயற்சி எடுப்பேன்
அரசு திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க முயற்சி எடுப்பேன்
அரசு திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க முயற்சி எடுப்பேன்
ADDED : செப் 30, 2011 01:23 AM
காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ,அ.தி.மு.க., சார்பில் ராமமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறியதாவது: ஒன்றிய கவுன்சில் பகுதிக்கு உட்பட்ட குரண்டி, மாங்குளம், முஷ்டக்குறிச்சி, அரசகுளம், கள்ளங்குளம், ஆலங்குளம் உட்பட பல்வேறு ஊர்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்மாய், ஊரணிகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் 'ஜெ' கொண்டு வரும் திட்டங்களை தாமதமின்றி ,அப்பகுதி மக்களுக்கு சென்றடைய, முழு முயற்சி எடுப்பேன். கிராம வளர்ச்சிக்கு பாடுபடுவதோடு , மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன், என்றார்.