/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அங்கன்வாடி ஆசிரியைக்கு புதுடில்லி குடியரசு தினவிழாவில் விருது
/
விருதுநகர் அங்கன்வாடி ஆசிரியைக்கு புதுடில்லி குடியரசு தினவிழாவில் விருது
விருதுநகர் அங்கன்வாடி ஆசிரியைக்கு புதுடில்லி குடியரசு தினவிழாவில் விருது
விருதுநகர் அங்கன்வாடி ஆசிரியைக்கு புதுடில்லி குடியரசு தினவிழாவில் விருது
ADDED : ஜன 28, 2025 05:07 AM

விருதுநகர்: விருதுநகர் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியை ஜெய்லானிக்கு, புதுடில்லி குடியரசு தினவிழாவில் சிறந்த முன்பருவ கல்விக்கான ஆசிரியர் விருதை பெண்கள் நல குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணாதேவி வழங்கினார்.
விருதுநகர் ஆர்.ஆர்., நகரை சேர்ந்தவர் எம்.ஜெய்லானி. இவர் சங்கரலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் முன் பருவ கல்வி பயிலும் அங்கன்வாடி மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பல்வேறு கல்வி சேவையை செய்து வருகிறார். விழிப்புணர்வு நாட்களில் ஊர்வலம் அழைத்து செல்வது, அங்கன்வாடியில் இருந்து வெளியேறும் போது நிறைவு விழா நடத்தி பெற்றோரை கவுரவிப்பது, நுாலகத்திற்கு அழைத்து செல்வது என இவரது கல்வி சேவைகளை பாராட்டி ஏற்கனவே மாநில அரசு கவுரவித்துள்ளது.
இந்நிலையில் இதை மத்திய அரசின் இணையத்திலும் பதிவேற்றிய நிலையில் ஜெய்லானி,உடன் இணைந்து திண்டுக்கல் ஜென்சி பிரபா, செங்கல்பட்டில் அஷ்னத் பீவி என மூவருக்கும் முன் பருவ கல்விக்கான சிறந்த ஆசிரியர் விருதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் புதுடில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். மூவரையும் அணிவகுப்பு மரியாதையை பார்க்கும் சிறப்பு விருந்தினர்களாகவும் அங்கீகரித்தனர். பின் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணாதேவி விருது வழங்கினார்.

