/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுமோ- டிப்பர் லாரி மோதல் : இருவர் பலி :11 பேர் காயம்
/
சுமோ- டிப்பர் லாரி மோதல் : இருவர் பலி :11 பேர் காயம்
சுமோ- டிப்பர் லாரி மோதல் : இருவர் பலி :11 பேர் காயம்
சுமோ- டிப்பர் லாரி மோதல் : இருவர் பலி :11 பேர் காயம்
ADDED : ஜூலை 31, 2011 11:11 PM
சாத்தூர் : சாத்தூர் நென்மேனி ரோட்டில் சுமோ காரும், டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பாலியாகினர்.11 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஹேமா ரெட்டியின் மகன் சூரியநாத்(25). இவர் ஒசூரில் வசித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர், தன்னூத்தில் வசிக்கும் தனது உறவினர்களுடன் நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வாடகை சுமோ காரில் வந்தார். காரை சேந்தமங்கலம் நாகராஜ் ஒட்டினார். இருக்கன்குடி கோவிலுக்கு செல்லும் பாதை தெரியாமல் சுமோ நென்மேனி ரோட்டில் சென்றது. பின்னர் விசாரித்து விட்டு திரும்பவும் இருக்கன்குடி வரும் வழியில் வந்தபோத, மாலை 4.30 மணிக்கு எதிரில் வந்த டிப்பர்லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் சுமோவில் இருந்த சூரியநாத்(25), கொட்டம்மாள்(56) சம்பவ இடத்தில் பலியாகினர். காரில் வந்த செல்வராஜ் (67), சியாமளா (22), தட்சண்யா (9), வெங்கட லட்சுமி(20) உட்பட 11 பேர் படுகாயமடைந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். விபத்துக்குள்ளான லாரி டிரைவர் தப்பி ஓடினார். கார் டிரைவர் நாகராஜிடம் இருக்கன்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.