/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு :பட்டதாரி ஆசிரியர்கள்
/
ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு :பட்டதாரி ஆசிரியர்கள்
ADDED : ஆக 25, 2011 11:41 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
புரவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலர் போஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன் பேசினர். மாவட்ட தலைவராக வள்ளுவன், செயலராக மாணிக்கவாசகம், பொருளாளராக சிங்கத்திருளன், துணை தவைர்களாக தாமோதரன், தங்கபாண்டி, சிவரமான், இணை செயலர்களாக ராஜகுமாரன், சங்கர், ஜெயகணேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒளிவு மறைவற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். கலந்தாய்வு இல்லாமல் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிப்பதை கண்டித்தும், மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வை அக்டோபர் கடைசியில் நடத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.