/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோ-ஆப் டெக்ஸ் சோதனையில் சிக்கிய தரமற்ற நூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்
/
கோ-ஆப் டெக்ஸ் சோதனையில் சிக்கிய தரமற்ற நூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்
கோ-ஆப் டெக்ஸ் சோதனையில் சிக்கிய தரமற்ற நூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்
கோ-ஆப் டெக்ஸ் சோதனையில் சிக்கிய தரமற்ற நூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்
ADDED : ஜூலை 29, 2011 11:03 PM
விருதுநகர் : கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் பள்ளி சீருடைகளுக்கான நூல்கள், கோ-ஆப் டெக்ஸ் தரப்பரிசோதனையில் தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டன.
தமிழகத்தில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்கள், பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான பாவு நூல்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் சப்ளை செய்யப்படும். குறுக்காக போடப்படும் நூல் தனியார் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் பெற்று, கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நூல்கள் அந்தந்த மாவட்ட நூல் கட்டுப்பாட்டு அலுவலரால் தர பரிசோதனை மையங்களில் சோதனை செய்து, நெசவுக்கு வழங்கப்படும். இந்தாண்டு முதல் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமே தரப்பரிசோதனை செய்து, நெசவாளர்களுக்கு நூல் வழங்குகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 18 டன் நூல்கள் சப்ளை செய்யப்பட்டு, 10 டன் நூல்கள் சோதனை செய்யப்பட்டதில், மூன்று டன் நூல்கள் மட்டுமே தரமாக உள்ளது; ஏழு டன் நூல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள எட்டு டன் நூல்கள் தரப் பரிசோதனையில் உள்ளன. பெரும்பான்மையான நூல்கள் தரமற்றவையாக இருப்பதால், அதிர்ச்சி அடைந்த கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள், தங்களது தரப்பரிசோதனையை தீவிரப்படுத்த உள்ளனர்.