ADDED : செப் 04, 2011 10:08 PM
நரிக்குடி:நரிக்குடியில் பன்றிகள், நாய்கள் தொல்லையால் மக்கள்
சிரமப்படுகின்றனர்.நரிக்குடி பஸ்ஸ்டாண்டு மற்றும் அருகிலுள்ள
குடியிருப்புகள், பர்மா காலனி குடியிருப்பு பகுதிகளுக்குள் பன்றிகள் சர்வ
சாதாரனமாக நடமாடுகின்றன. பன்றிகள் அனைத்தும் வேறு ஊர்களிலிலருந்து கொண்டு
விடப்பட்டவையாகும்.
சாக்கடை கழிவுநீரில் புரண்டு விளையாடி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள்
புகுந்து விடுகின்றன. இதுதவிர பள்ளிகளுக்குள்ளும், ஆஸ்பத்திரிக்குள்ளும்
அதிகமாக நடமாடுகின்றன. இதனால் குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்றுநோய்
ஏற்பட வாய்ப்புள்ளது. இவைகள் ரோட்டிலும் நடமாடுவதால் வாகன ஓட்டிகள்
விபத்துக்குள்ளாகின்றனர். பன்றிகளோடு தெருநாய்களும் சேர்ந்து மக்களுக்கு
பெரும் சிரமத்தினை தருகின்றன. எனவே பன்றிகள் மற்றும் நாய்களை அகற்ற ஊராட்சி
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.