sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடத்திய மாணவர் வீடு திரும்பினார் பணம் கேட்டு மிரட்டல் தொடர்கிறது குழப்பத்தின் உச்சத்தில் போலீசார்

/

கடத்திய மாணவர் வீடு திரும்பினார் பணம் கேட்டு மிரட்டல் தொடர்கிறது குழப்பத்தின் உச்சத்தில் போலீசார்

கடத்திய மாணவர் வீடு திரும்பினார் பணம் கேட்டு மிரட்டல் தொடர்கிறது குழப்பத்தின் உச்சத்தில் போலீசார்

கடத்திய மாணவர் வீடு திரும்பினார் பணம் கேட்டு மிரட்டல் தொடர்கிறது குழப்பத்தின் உச்சத்தில் போலீசார்


ADDED : செப் 04, 2011 10:10 PM

Google News

ADDED : செப் 04, 2011 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: கடத்தப்பட்டதாக கூறிய சிவகாசி மாணவர் வீடு திரும்பினார். பணம் கோட்டு மாணவரின் தந்தைக்கு மிரட்டல் தொடர்கிறது. திண்டுக்கல்லை சேர்ந்த மூவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த ரமேஷ்பாண்டியன் மகன் கோடீஸ்வரன்,14. இவர் ஆக. 30ல் திருத்தங்கல் கலைமகள் பள்ளிக்கு சென்றவர் காணவில்லை. இதற்கிடையே சிலர் மொபைலில் ரூ.25 லட்சம் கேட்டு இந்தியில் மிரட்டினர். இது குறித்து ரமேஷ்பாண்டியன் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

பணம் போடுவதற்காக வங்கி கணக்கு எண் வழங்கப்பட்டது. இதில் போலீசார் ரூ.25 ஆயிரம் பணம் போட்டனர். அதன் பின்னர் வங்கி கணக்கு குறித்த விசாரணையில் ஈரோடு எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு துவக்கியுள்ள திண்டுக்கல் மாவட்டம் குழிப்பட்டியை சேர்ந்த ஆண்டவர், 35. என தெரிந்தது. அவரையும் அவரது சகோதாரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரன் ஆகியோரை விசாரிக்கும் போது ஆண்டவர் ஈரோடு வீரபாளையம் 3 வது தெருவில் உள்ள யு.ஆர்.சி., கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என தெரிய வந்தது.

அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த ஜெகன் என்பவர் நண்பராகியுள்ளார். இவர் மூலமாக மும்பையில் உள்ள ராஜ்பாய், சஞ்சய்பாய் ஆகிய இருவருடனும் மொபைலில் பேசி பழகியுள்ளார். இதன் மூலமாக மொபைல் போன் மெசேஜ் மூலமாக டிஷ் 'டிவி' ரீசார்ஜ் செய்து கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஆயிரம் ரூபாய் கமிஷனாக பெற்று வந்துள்ளனர்.

இதற்கிடையே கடத்தப்பட்தாக கூறப்பட்ட மாணவர் கோடீஸ்வரன் சிவகாசியிலிருந்து எம்.புதுப்பட்டிக்கு நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்வது தெரிந்த போலீசார் அவனை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு திருச்செந்தூருக்கு சென்றதாகவும். அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்துள்ளார். வீட்டு ஞாபகம் வரவே ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தார்.மாணவர் திரும்பிய பின்னரும் ரமேஷ் பாண்டியன் மொபைலுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டேயிருக்கிறது. மொபைல் நம்பர் குறித்து போலீசார் விசாரணையில் பாகிஸ்தானிலிருந்து பேசியுள்ளனர் என தெரியவந்துள்ளது. மாணவர் கிடைத்த பின்னரும் மிரட்டல் தொடர்ந்து வருவதால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.மாணவர் கிடைத்த சந்தோஷம் ஒரு புறம் என்றால் பணம் கேட்டு மிரட்டியவர்களுக்கு ரமேஷ்பாண்டியன் நம்பர் எப்படி கிடைத்தது. ஏன் மிரட்டல் விடுத்து பணம் கேட்டனர் என்பது புரியாத நிலையில் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us