sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி, கல்லூரிகளில் ”தந்திர தினவிழா கொண்டாட்டம்

/

பள்ளி, கல்லூரிகளில் ”தந்திர தினவிழா கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் ”தந்திர தினவிழா கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் ”தந்திர தினவிழா கொண்டாட்டம்


ADDED : ஆக 17, 2011 12:04 AM

Google News

ADDED : ஆக 17, 2011 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர்: நோபிள் மெட்ரிக் பள்ளியில் இயக்குனர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். செயலர் வெர்ஜி இனிகோ முன்னிலை வகித்தார். ஆசிரியர் கனகராஜ் வரவேற்றார். ஊராட்சித்தலைவர் வரதராஜன் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் நாசர் தொகுத்து வழங்கினார். மரிய இக்னிஷியஸ் ஜோசப்ராஜ் நன்றி கூறினார். ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழா கலைநிகழ்ச்சிகளில் நோபிள் மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாம் பரிசினை கலெக்டர் பாலாஜி வழங்கினார்.

*காமராஜர் மக்கள் சேவை மையம் சார்பில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். பழனிக்குமார், சக்கையாபாண்டியன், அழகுசுந்தரமூர்த்தி, செல்வக்குமார், கதிர்வேல், கண்காணிப்பாளர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். செந்திக்குமார நாடார்- மீனாட்சியம்மாள் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

*மகாத்மா காந்தி சமூகநலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சின்னராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் விழா நடந்தது. ஊர்த்தலைவர் காளிமுத்து கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் ரவி இனிப்பு வழங்கினார். ஆசிரியை ரோஸ்லின் மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக இயக்குனர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

*தாமு மெட்ரிக் பள்ளியில் செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தார். நோபிள் பள்ளி முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் கொடி ஏற்றினார். மாணவர்கள்,ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார். பள்ளி முதல்வர் லலிதா நன்றி கூறினார்.

சிவகாசி: நகராட்சியில் நகராட்சி தலைவி ராதிகாதேவி கொடியேற்றினார். துணைத்தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் முருகேசன், பொறியாளர் முருகன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

* சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் (பொறுப்பு) பழனிச்செல்வம் கொடியேற்றினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் ரமணி, பி.டி.ஓ.,க்கள் சுப்பராமன், முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

* காளீஸ்வரி கல்லூரியில் செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன் கொடியேற்றினார். முதல்வர் கண்மணி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

* அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் நிர்வாக குழு உறுப்பினர் நளினி கொடியேற்றினார். முதல்வர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மாணவிகள் நிலா, சத்யபிரியா, தனுஜா, அனந்த பாக்கியம், மாரியம்மாள், முன்னாள் மாணவிகள் அம்பிகா, ஆரோக்கியமேரி பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது.

* நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா நடந்தது. நகராட்சி துணை தலைவர் அசோகன் கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜகோபால், விருதுநகர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் உள்பட பலர் பேசினர்.

* முஸ்லிம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு நிர்வாகி செய்யது மைதீன் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் ரஜாக் கொடியேற்றினார். முன்னாள் கவுன்சிலர் ஹாத்தீம், அப்துல் ஜப்பார், அல்லாவுதீன் பேசினர்.

*சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ., மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளியில் பைரோசிட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜேஷ் கண்ணன் கொடியேற்றினார். தாளாளர் எட்வின் கனகராஜ் பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன் பர்னபாஸ் நன்றி கூறினார்.

* ஒய்ஸ்மென் சங்கம் சார்பில் தலைவர் ஆனந்தராஜ் கொடியேற்றினார். செயலாளர் சென்றாயப்பெருமாள் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் ராஜலட்சுமி, மகளிர் சங்க தலைவி கலாவதி பேசினர். மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டன. முன்னாள் தலைவர் ரகுநாதன் நன்றி கூறினார்.

* எஸ்.ஆர்.வி., கல்வியியல் கல்லூரியில் தாளாளர் பிரதீப் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வீரணன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பெருமாள்சாமி கொடியேற்றினார். முதல்வர் ஜோதி கிருஷ்ணகுமாரி பேசினர்.

திருத்தங்கல்: கருணாநிதி காலனியில், ஸ்டார் தொண்டு நிறுவன தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் குணசேகரன், துணை தலைவர்கள் சின்னச்சாமி, மரியசூசை, பால்சாமி முன்னிலை வகித்தனர். பொருளாளர் செல்வம் வரவேற்றார். செவிலியர் மகாலட்சுமி கொடியேற்றினார். செயலாளர் முனியசாமி, வைரவன் வாழ்த்தினர்.

* மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் விஜராகவன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் செயலளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். நகர முன்னாள் பொதுச்செயலாளர் சங்கரபாண்டியன் கொடியேற்றினார்.

ராஜபாளையம்: என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலம் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில், ஜெயலட்சுமி ராமசந்திர ராஜா அறக்கட்டளை சேர்மன் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தொழிலதிபர் அர்ஜூன ராஜா தேசிய கொடி ஏற்றினார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மஞ்சுளா செய்தார். டிரஸ்டிகள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா, பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

* சத்யா வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். முதல்வர் முருகதாசன், துணைமுதல்வர் சத்யமூர்த்தி, தலைமை ஆசிரியை ராதாபாய் முன்னிலை வகித்தனர். ஆசிரியை முத்து சங்கரி வரவேற்றார். அலையன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ராம்சிங் மற்றும் நிர்வாகிகள், டாக்டர் சித்ரா கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

*என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளியில் செயலாளர் என்.எஸ்.சதீஷ்குமார் ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தொழிலதிபர் ஜான் கொடி ஏற்றி, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உதவிதலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாவட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் தேசிய கொடியேற்றி வைத்தார். நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

*செயின்ட் ஆன்டனி மெட்ரிக் பள்ளியில் பள்ளிதலைமை ஆசிரியர் ரபேல் ஆரோக்கிய ராஜ் தேசியகொடியேற்றி வைத்தார்.

*வள்ளுவர் பள்ளியில் தாளாளர் சிவக்குமார் கொடியேற்றி வைத்தார். முதல்வர் ரேணுகா, பள்ளி நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், பள்ளி நிர்வாகி ரேணுகா தேவி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

* கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் நடந்த விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றி, என்.சி.சி.மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

* சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் செயலர் திலீபன் ராஜா கொடி ஏற்றினார். மாணவர்கள் மும் மதத்திலிருந்தும் பொன் மொழிகள் வாசித்தனர். முதல்வர் பிரீத்தா, மக்கள் தொடர்பு அதிகாரி பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் ரேணுகாதேவி, அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடந்த விழாவில் மக்களுக்கு தேசிய கொடி அட்டையை தலைவர் முத்துக்குமார், செயலாளர் நாராயணன், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.

* கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைபள்ளியில் ஸ்ரீவி., தொகுதி எம்.எல்.ஏ., பொன்னுபாண்டியன் தேசிய கொடியேற்றினார்.

* ஸ்ரீவி.,டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமசாமி கொடியேற்றினார்.

சாத்தூர்: சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் குருசாமி தேசியக்கொடி ஏற்றினார். பொறியாளர் வாசுதேவன், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

* சாத்தூர், லிட்டில் பட்ஸ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் செயலர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தார்.தலைமையாசிரியர் மகாலட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஆசிரியை ஹேமா நன்றி கூறினார்.

* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி சேர்மன் க.சக்திவேல் கொடி ஏற்றினார். துணை சேர்மன் ராதாகிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் பூங்குழலி, ரவி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* இளைஞர் காங்கிரஸ் சார்பில் வடக்கு ரதவீதி,முக்குராந்தல் பகுதியில் தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமையில் நடந்தது.முன்னாள் மாவட்ட தலைவர் தங்கவேல் கொடியேற்றினார்.

* சிவகாசி முன்னாள் நகராட்சி தலைவர் ஏ.ஞானசேகரன், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி.வி.கார்த்திக், சந்திரன், காளிமுத்து, பாண்டி, நாகராஜ், மைதீன்பாய், சதீஸ்குமார் கலந்து கொண்டனர்.

*ராதாகிருஷ்ணன் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் லால்பகதூர் சாஸ்திரி பப்ளிக் ஸ்கூல் முதல்வர் கிறிஸ்டி குளோரி சாந்தி தலைமை வகித்தார்.பள்ளியின் தாளாளர் பாபு.ஏ.ராஜேந்திரன் கொடியேற்றினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பாட்டு ஆசிரியை சவுந்தரவள்ளி,ஒருங்கிணைப்பாளர் கனகாம்சம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

*ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் செயலர் டி.குமரேசன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் எஸ்.வரதராஜன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.சேதுலிங்கம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வி.ஜெயச்சந்திரன் பேசினார். ஆசிரியர்கள் அழகர்சாமி, சீனிவாசன், ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.

* இந்து நாடார்கள் எத்தல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் பி.ராஜிவ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் லீன்ரோஸ் மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் காதம்பரி பரிசுகள் வழங்கினார்.ஆசிரியர் மெர்ஸி நன்றி கூறினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

மல்லாங்கிணர்: பேரூராட்சியில் செயல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில், துணைத் தலைவர் போஸ் முன்னிலையில், சேர்மன் நாகையா கொடி ஏற்றினார்.

* செந்திக்குமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவசகாயம் கொடி ஏற்றினார்.

* மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் கொடி ஏற்றினார்.

* ஆவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுதந்திரதாஸ் கொடி ஏற்றினார்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஏ.இ.ஓ., அலுவலகத்தில், ஏ.இ.ஓ.,பால்ராஜ் கொடியேற்றினார். கூடுதல் ஏ.இ.ஓ., நாகராஜன் முன்னிலை வகித்தார். அலுவலர்கள் சின்னச்சாமி,சிவகாந்தீஸ்வரி, சண்முகவடிவு, அழகுமலை கலந்து கொண்டனர்.

* ஏ. கல்லுபட்டி சித்தி விநாயகர் இந்து துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். செயலர் துரைச்சாமி வாழ்த்தி பேசினார். உதவி ஆசிரியை குணவதி நன்றி கூறினார்.

* அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் ராமநாதன் கொடியேற்றினார். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* பாலையம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி மங்களேஸ்வரி கொடியேற்றினார். அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

* புலியூரானில், விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திராவும், ரெட் ரோஸ் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய விழாவில் மாவட்ட காங்., செயலர் சந்தானம் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். பொருளாளர் சித்து மாணிக்கம் வாழ்த்தினார்.

* முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது யூசுப் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பாராமன் கொடியேற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

* சின்ன புளியம்பட்டி கம்மவார் ராமானுஜர் நடு நிலை பள்ளியில் பள்ளி செயலர் இளங்கண்ணன் கொடியேற்றினார். உறவின்முறை தலைவர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். நிர்வாக குழு தலைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

* புளியம்பட்டி முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். சங்க தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் பொன்னுதம்பி கொடியேற்றினார். பி.டி.ஓ., தனசேகரன், மேனேஜர்கள் பத்மினி, நாகமூர்த்தி, திட்ட அலுவலர் முருகன், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

* டி.எஸ்.பி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொடியேற்றினார். போலீசார் கலந்து கொண்டனர்.

சேத்தூர்: போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு காவல் இன்ஸ்பெக்டர் ஜெயகுரு கொடியேற்றினார்.

*விநாயகா வித்யாலயா ஆங்கிலப்பள்ளியில் முதல்வர் செல்வம் கொடியேற்றினார்.

* சேத்தூர் திருவள்ளுவர் தழிழோசை மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா நவநீதகிருஷ்ணராஜா தலைமையில் நடந்தது.டாக்டர் அர்ஜூனன்,சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி,கவிஞர் சடையப்பன் பேசினர்.நேதாஜியின் இந்திய தேசியப்படையில் பணியாற்றிய கேப்டன் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.திருவள்ளுவர் மன்ற செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us