ADDED : பிப் 06, 2025 12:15 AM

சிவகாசி; கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், கிராம உதவியாளர்கள் பணியில் இறக்கும் பட்சத்தில் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டுமென்பதுட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டை வட்டார தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். வட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் கந்தசாமி, பொருளாளர் முருகராஜ் வரவேற்றனர்.,
மாவட்ட பிரதிநிதிகள் கருப்பசாமி ராமு அத்தை கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர் இணை செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
*திருச்சுழி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருச்சுழி வட்ட தலைவர் முனியசாமி, செயலாளர் சுதா, பொருளாளர் முத்துராஜா, மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.