ADDED : ஆக 19, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதியின் படி அனைவருக்கும் பென்சன் வழங்குதல், கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு பணி வழங்குதல், 25 மாதங்களாக வழங்காத ஓய்வூதியர்களின் நிலுவைகளை வழங்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் மதுரை சங்க தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் போஸ், மத்திய சங்க பொருளாளர் திருப்பதி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமலை உள்பட பலர் பங்கேற்றனர்.