/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீணாக வெளியேறும் தாமிரபரணி குடிநீர்
/
வீணாக வெளியேறும் தாமிரபரணி குடிநீர்
ADDED : செப் 16, 2025 03:54 AM

காரியாபட்டி: காரியாபட்டி, விருதுநகர் பகுதிகளில் தாமிரபரணி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
காரியாபட்டி பகுதியில் பெரும்பாலான கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் உள்ளூர் தண்ணீருடன் கலந்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் தனியாக சப்ளை செய்யப்படுகிறது. இதன் மூலம் குடிநீர் தேவை ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரியாபட்டி செவல்பட்டி அருகே தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, 15 நாட்களாக தண்ணீர் வீணாகி, ரோட்டில் ஓடுகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதே போல் விருதுநகரில் கச்சேரி ரோடு மகாலெட்சுமி இன்டஸ்ட்ரீஸ் நுழைவுப் பகுதியிலும் குடிநீர் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே அப்பகுதி மண் ரோடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். கடுமையாக வெயில் தாக்கி வருவதால் ஆங்காங்கே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.