/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை ரோட்டில் வீணாகும் குடிநீர்
/
மதுரை ரோட்டில் வீணாகும் குடிநீர்
ADDED : மே 26, 2025 02:01 AM

விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் சேதமான குடிநீர் குழாய் கடந்த சில நாட்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு எதிரே குடிநீர் வெளியேறி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு வரை ஆறாக ஓடியது.
விருதுநகர் -மதுரை ரோட்டின் ஓரத்தில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாயில் ஏற்பட்ட சேதம் சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. ஆனால் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு அருகே ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டிற்கு எதிரே குழாய் வழியாக குடிநீர் வெளியேறியது.
இக்குடிநீர் ரோடு ஓரத்தில் ஆறாக ஓடி நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோடு இணையும் இடத்தில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். குழாய்களை முறையாக பராமரிக்காததாலும், சீரமைப்பு பணிகளை சரியாக செய்யாததாலும் குடிநீர் வீணாகி வருகிறது.
விருதுநகரில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் சேதத்தால் குடிநீர் வீணாகுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குழாய் சேதத்தில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.