/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அண்ணாமலையை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
/
அண்ணாமலையை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
அண்ணாமலையை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
அண்ணாமலையை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
ADDED : பிப் 14, 2025 06:22 AM
விருதுநகர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை, என விருதுநகரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
அவர் கூறியதாவது:
தொண்டு நிறுவனங்கள் முதியோர் இல்லங்கள் துவங்க வந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். விருதுநகரில் நடந்த ஆய்வில் எடை குறைவாக குழந்தைகள் பிறப்பது குறித்து சிறப்பு கவனம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகள்பாலியல் சீண்டல்கள் பற்றி தானாக முன் வந்து புகார் கூறுவது அதிகரித்துள்ளது. ஆண் குழந்தைகள் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தகுதியுள்ள விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். இன்று பெண்கள் சுதந்திரமாக இருக்க திராவிட இயக்கம்தான காரணம். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவ வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அவர் வாயில் வருவதெல்லாம் பொய். அவர் கூறுவதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என்றார்.