/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
/
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
ADDED : அக் 29, 2024 04:40 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களை கட்டியது.
அருப்புக்கோட்டை -பந்தல்குடி ரோட்டில் நகராட்சி ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை நடைபெறும். இங்கு விருதுநகர், காரியாபட்டி, புதூர், திருச்சூழி, விளாத்திகுளம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க இங்கே வருவர்.
வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனை செய்யப்படும். விழா காலங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். நேற்று திங்கள்கிழமை ஆட்டுச் சந்தை என்பதாலும், அடுத்த 2 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, அதிகாலை 5:00 மணி முதலே ஆடுகள் விற்பனை களை கட்டியது.
உள்ளூர், வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்தனர். ஒரு ஆட்டுக்குட்டி 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையும், பெரிய ஆடு ஒன்று 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. நேற்று மட்டும் 50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.