/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்கேன் மட்டும் செய்வோம் ரிப்போர்ட் தனியாரிடம் வாங்கிக்கோங்க
/
ஸ்கேன் மட்டும் செய்வோம் ரிப்போர்ட் தனியாரிடம் வாங்கிக்கோங்க
ஸ்கேன் மட்டும் செய்வோம் ரிப்போர்ட் தனியாரிடம் வாங்கிக்கோங்க
ஸ்கேன் மட்டும் செய்வோம் ரிப்போர்ட் தனியாரிடம் வாங்கிக்கோங்க
ADDED : நவ 22, 2024 03:55 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட் இல்லாததால் நோயாளிகளுக்கு ஸ்கேன் மட்டும் செய்து அந்த ரிப்போர்ட்டை வாங்க தனியார் லேப்பில் பணம் கொடுத்து வாங்கும் பரிதாப நிலையில் நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கு கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரசவ வார்டு, பெட் வசதி, லேப், நவீன ஆப்ரேஷன் தியேட்டர், குழந்தைகள் வார்டு உட்பட அனைத்து வசதிகள் இங்கு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பிறகு கூடுதல் வச திகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் இங்குள்ள சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுத்தபின், அதன் ரிப்போர்ட் கொடுக்க ரேடியாலஜிஸ்ட் இல்லை. ஒரு ஆண்டு காலமாக இந்த பணியிடம் காலியாகவே உள்ளது. சில மாதங்களில் மாற்றுப்பணியாக டாக்டர்கள் வந்து சென்றனர், தற்போது அவர்களும் வருவதில்லை.
இங்கு தினமும் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிடி ஸ்கேன் எடுக்கவும், 30 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கவும் வருகின்றனர். ஆனால் இங்கே ஸ்கேன் மட்டும்தான் எடுக்கப்படுகிறது.
அதற்கான ரிப்போர்ட் கொடுக்க ரேடியாலஜிஸ்ட் இல்லாததால் தனியார் ஸ்கேன் லேப் இருக்கு சென்று பணம் செலுத்தி ரிப்போர்ட் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இங்கு நிரந்தர ரேடியாலஜிஸ்ட் நியமிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். -