/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடைக்காது என தெரிந்தும் விவசாயிகளை இன்சூரன்ஸ் போட சொன்னது ஏன்
/
கிடைக்காது என தெரிந்தும் விவசாயிகளை இன்சூரன்ஸ் போட சொன்னது ஏன்
கிடைக்காது என தெரிந்தும் விவசாயிகளை இன்சூரன்ஸ் போட சொன்னது ஏன்
கிடைக்காது என தெரிந்தும் விவசாயிகளை இன்சூரன்ஸ் போட சொன்னது ஏன்
ADDED : பிப் 15, 2024 04:54 AM
காரியாபட்டி: மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காது என தெரிந்தும் விவசாயிகளை இன்சூரன்ஸ் போட சொன்னது ஏன் ,என காரியாபட்டி ஒன்றிய க்குழு கூட்டடத்தில் அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
காரியாபட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையில், துணைத்தலைவர் ராஜேந்திரன், பி.டி.ஓ., கள் சண்முகப்பிரியா, போத்திராஜ் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்
முருகன் (அ.தி.மு.க.),: தனியார் மருத்துவ கழிவு எரியூட்டும் ஆலையை மூடியதாக அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினீர்கள். தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய கவுன்சிலர்கள், 20க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அந்நிறுவனம் வழக்கு தொடுத்த போது, அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞருக்கு தீர்மான நகல்களை கொடுக்காதது குறித்து சுட்டிக்காட்டியும், ஒப்படைக்காதது ஏன்.
நாகர் பாண்டீஸ்வரி, (அ.தி.மு.க.): யூனியன் கண்மாய்களில் மடைகள், கலுங்குகள் சேதம் அடைந்து உள்ளன. தூர்வாராமல் உள்ளதால் மழை நீரை தேக்கி வைக்க முடிய வில்லை. பராமரிப்புச் பணிகளை செய்து, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செல்வம், (அ.தி.மு.க.): வெள்ளத்தில் பாதித்த நெல், மிளகாய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. இன்சூரன்ஸ் கிடைக்காது என தெரிந்தும், விவசாயிகளை வற்புறுத்தி இன்சூரன்ஸ் போடச் சொன்னது ஏன் என கேள்வி எழுப்பினர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

