ADDED : ஜன 20, 2025 04:49 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழ்நிலையே நிலவி வருகிறது. விருதுநகரில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் இரவில் அதிக அளவில் பனி இருந்ததால் குளிர்ந்த வானிலை காணப்பட்டது.
ராஜபாளையத்தில் அதிகாலையில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. சாத்துாரில் அதிகாலை 3:00 மணி முதல் இடைவெளி விட்டு காலை வரை சாரல் மழை பெய்தது.
அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை சாரல் மழையே பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்துார்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அதிகாலை 2:00 மணி முதல் மாலை வரை சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது.
இதனால் பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துடன் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்தனர்.