/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பகுதியில் மணல் திருட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா
/
நரிக்குடி பகுதியில் மணல் திருட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா
நரிக்குடி பகுதியில் மணல் திருட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா
நரிக்குடி பகுதியில் மணல் திருட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா
ADDED : ஏப் 04, 2025 06:21 AM

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதால். கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி பகுதியில் கிருதுமால் நதியில் ஏராளமான மணல் உள்ளன. இதனை ஒட்டி உள்ள நிலங்களிலும் மணல்கள் குவிந்து கிடக்கின்றன. டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
போலீசார், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தபின் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்கின்றனர். மணல் திருட்டில் ஈடுபடும் நபருக்கு முன்கூட்டியே தகவல் செல்வதால் எளிதில் தப்பி விடுகின்றனர்.
நேற்று முன் தினம் அ.முக்குளம் அருகே கோவிலாங்குளம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி பிடித்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.