/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
/
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
ADDED : ஜன 16, 2025 04:39 AM
நரிக்குடி: நரிக்குடியை சுற்றிய கிராமங்களிலிருந்து ஏராளமானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக வந்து செல்லும் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் காய்ச்சல்,தலைவலி, பிரசவம், விபத்து என பல்வேறு சிகிச்சைகளுக்காக நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வசதி இல்லாததால்அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது. அப்பகுதி மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
நரிக்குடியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல வாடகை வாகனங்கள் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தினால் கூடுதலாக வசதிகளை அரசு செய்து தரும்.
அதன் மூலம் கிராமப்புறங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும். எனவே ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.