/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால கெடுவுக்குள் முடிவடையுமா ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்-- பணி
/
கால கெடுவுக்குள் முடிவடையுமா ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்-- பணி
கால கெடுவுக்குள் முடிவடையுமா ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்-- பணி
கால கெடுவுக்குள் முடிவடையுமா ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்-- பணி
ADDED : பிப் 18, 2024 12:43 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் அறிவித்துள்ளபடி ஜூன் மாதத்திற்குள் முடிவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவரை தற்காலிகமாகவாவது வசதிகளை ஏற்படுத்த பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் நெருக்கடி காரணமாக இடித்து விட்டு புதிய கட்டுமானம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2022 டிசம்பரில் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டது.
ஏற்கனவே இட நெருக்கடி காரணமாக 18 வருடங்களுக்கு முன் சங்கரன்கோவில் ரோடு பெரியாதிகுளம் எதிரே பழைய நகராட்சி குப்பை கிடங்கு இடத்தில் டவுண் பஸ், தொலைதுார பஸ்கள் என அனைத்திற்கும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டாக திறக்கப்பட்டது.
இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த வியாபாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து பழைய பஸ் ஸ்டாண்டும் கைவிடப்படாமல் செயல்பாட்டில் தற்போது வரை இருந்து வந்தது.
இதனை அடுத்து டவுன் பஸ்கள் மட்டும் இயங்கும் பஸ் ஸ்டாண்டாக மாறி எப்போதும் போல் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடங்களின் நிலை கருதி ரூ.2.90 கோடி மதிப்பில் புதிய கட்டடப்பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது.
இதனை அடுத்து காந்தி சிலை ரவுண்டானா அருகே மகப்பேறு மருத்துவம் முன்பு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அறிவிக்கப்பட்டது. ஆரம்பித்த புதிதில் தொடர் குடிநீர் வசதி அமைத்து பின்னர் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.
தினமும் இடிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பும், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இயங்கும் மகப்பேறு மருத்துவமனை முன்பு என பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள், தொழிலாளர்கள், பயணிகள் எந்த அடிப்படை வசதியும் இன்றி சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இயற்கை உபாதைகளுக்கு வழியற்ற நிலையில் மாணவிகள், பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. அரசு மகப்பேறு மருத்துவமனையின் ஒரு பகுதியில் மட்டும் மேற்கூறையுடன் இருக்கை வசதியை அமைத்து எதிர்ப்பகுதியில் ஒதுங்கவும் இடமில்லாத நிலை காணப்படுகிறது. போதிய மின்விளக்கு வசதி, பயனிகளுக்கு பஸ் வந்து செல்லும் நேர அட்டவணை, போலீசாரின் உரிய பாதுகாப்பு என அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாத முடிவில் பணிகளை முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதாக அறிவிப்பு பலகை கட்டுமான நிறுவனம் சார்பில் வைத்துள்ளனர். பயணிகளின் தேவை கருதி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.