/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணத்தகராறில் பெண் கொலை; வாலிபருக்கு ஆயுள்தண்டனை
/
பணத்தகராறில் பெண் கொலை; வாலிபருக்கு ஆயுள்தண்டனை
ADDED : ஜூலை 30, 2025 07:07 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; சிவகாசி அருகே திருத்தங்கலில் பணத்தகராறில் மோகன பிரா 25, முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்த விக்னேஸ்வனுக்கு31, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கலை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். அலைபேசி கடை உரிமையாளர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன பிரபா 25, என்பவரிடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.
2017 ஜூன் 10 அன்று இரவு மோகன பிரபாவிடம் பணம் கேட்டு விக்னேஸ்வரன் தகராறு செய்துள்ளார். இதில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு தலையணையை கொண்டு முகத்தில் அமுக்கி விக்னேஸ்வரன் கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் விக்னேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.