/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்
/
காரியாபட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்
காரியாபட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்
காரியாபட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்
ADDED : மார் 21, 2025 06:12 AM

காரியாபட்டி : காரியாபட்டியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரியாபட்டியில் டூவீலர், வீடு புகுந்து நகை திருட்டு அதிக அளவில் நடைபெற்று வந்தன. மற்ற பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் காரியாபட்டி பகுதியை தேர்ந்தெடுத்து பதுங்கி இருப்பது, இந்த வழியாக தப்பித்து செல்வதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். போகும் வழியில், வழிப்பறி, செயின் பறிப்பு, தனியாக செல்பவர்களை தாக்கி பணம், அலைபேசியை பறித்து செல்வது உள்ளிட்ட சம்பவங்களை செய்து விட்டுச் சென்றனர்.
இதனை போக்கும் வகையில் காரியாபட்டியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயன்பாட்டிற்கு வந்த பின், இனி டூவீலர் திருட்டு, வீடு புகுந்து நகை கொள்ளை அடிப்பது, மற்ற பகுதிகளில் இருந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இப்பகுதியில் பதுங்குவது, தப்பிச் செல்வதை எளிதில் கண்டறிந்து கைது செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே காரியாபட்டி பகுதியில் இனி குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.