ADDED : செப் 28, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் லிங்கராஜ்,24, இவர் பெரியகுளம் கண்மாயில் மீன் பாசி காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது மீன் பிடிப்பதற்காக கண்மாயில் வலை போடப்பட்ட நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கண்மாயை பார்வையிட பைக்கில் சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரிக்கிறார்.