ADDED : செப் 08, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கொடுக்கல், வாங்கல் தகராறில், கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே குல்லுார் சந்தையை சேர்ந்தவர் நாகராஜ், 27. இவர், நேற்று காலையில் அணைக்கட்டு கால்வாய் பாலத்திற்கு அருகே தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு நாகராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, 22, என்பவருடன் சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, 500 ரூபாய் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, நாகராஜை, கந்தசாமி கொலை செய்தது தெரிந்தது.
சூலக்கரை போலீசார் கந்தசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.