sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றுவது எப்போதுதொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

/

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றுவது எப்போதுதொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றுவது எப்போதுதொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றுவது எப்போதுதொழிலாளர்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 22, 2024 04:03 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.,) மருத்துவமனை பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றும் பட்சத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவர். விரைவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஆனையூரில் 1987 அக். 10ல் 50 படுக்கைகள் வசதியுடன் துவங்கப்பட்டது. தொடர்ந்து 2000ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 300 பேர் வரை வெளி நோயாளிகளாகவும் 100 பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்பநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது.

கருப்பை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கர்ப்பப் பையை எடுக்கும் அறுவை சிகிச்சை இங்கு தினமும் நடக்கிறது. டயாலிசிஸ், புற்றுநோய் மேல் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் கட்டடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அனைத்து இடங்களிலுமே கட்டடம் சேதமடைந்துள்ளது.

ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து கட்டடத்தின் உள்ளேயும் இறங்குகிறது. 3 தளம் கொண்ட மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக லிப்ட் செயல்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்காக வருகிற வயதானவர்கள், காயமடைந்தவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் இடவசதி இல்லாமல் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், செவிலியர் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையின் வளாகத்தில் போடப்பட்டுள்ள ரோட்டில் கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. இவ்வளவு பிரச்னைகளால் தள்ளாடும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு முன்பு சிவகாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி ரூ.150 கோடியில் விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. சமீபத்தில் சட்ட பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர். ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை.

கட்டடங்கள் சேதம்:

மருத்துவமனையில் லிப்ட் இயங்காததால் வயதானவர்கள், காயம் அடைந்தவர்கள் மாடிக்கு படியேறி செல்ல சிரமப்படுகின்றனர். இங்கு உள் நோயாளிகளுக்கு குறைந்த அளவே கழிப்பறை உள்ளது. கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பல்வேறு வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் பெரும்பான்மையான கட்டடங்கள் மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. ஆங்காங்கே சிமென்ட் பெயர்ந்து கட்டடம் கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கிறது. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். உடனடியாக கட்டடங்களை சீரமைக்க வேண்டும். பாலசுப்பிரமணியன், பட்டாசு தொழிலாளர், வெள்ளூர்.








      Dinamalar
      Follow us