UPDATED : நவ 07, 2026 04:54 PM
ADDED : நவ 07, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறை சார்பில் உலக ரோன்ட்ஜன் தினவிழா டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துறைத்தலைவர் அருண் செல்லத்துரை, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் நடப்பாண்டு முதல் பி.எஸ்.சி., ரேடியோலாஜி 20 இடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டதையும், புதிதாக 2 முதுநிலை மருத்துவ படிப்புகள் ஒதுக்கப்பட்டதும் அறிவிக்கப்பட்டது. இணை பேராசிரியர் நிஷா நடத்திய வினாடிவினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் வெனிஷா நன்றியுரை வழங்கினார்.
