UPDATED : நவ 14, 2026 05:27 PM
ADDED : நவ 14, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி - குச்சம்பட்டி புதூர் சந்திப்பில், திருச்சுழி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
போலீசார் கட்டை பையை சோதனை செய்ததில் அதில் 1.250 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. அவர் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த பூமிநாதன், 30, என்பதும்,முருகையாபுரம் கிராமத்தில் குடியிருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
