மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்
மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்
ADDED : செப் 06, 2011 12:17 AM
மதுரை:திருமங்கலம் அருகே அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமியை கைது செய்து, கொடுமைப்படுத்தியதாக தாக்கலான வழக்கில், எஸ்.பி., மனோகரன் உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராயினர்.திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, எஸ்.பி., மனோகரன் (தற்போது சத்தியமங்கலம் அதிரடிப்படை எஸ்.பி.,) மற்றும் போலீசார், பிரசாரத்தில் ஈடுபட்ட சாமி மற்றும் கட்சியினரை கைது செய்தனர்.
மனித உரிமைகளை மீறி நடந்ததாக எஸ்.பி., மனோகரன், டி.எஸ்.பி., ஷாஜகான் (தற்போது ஓய்வு), இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சத்யபிரபா மீது சாமி வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜராயினர். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் கே.அருண் தமிழரசன் ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டி, வழக்கை செப்., 27க்கு தள்ளி வைத்து நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) உத்தரவிட்டார்.