ADDED : ஆக 11, 2011 07:55 PM
தூத்துக்குடி: தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதாராதாகிருஷ்ணன் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை, கடந்த ஐந்து மாதத்திற்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்ய தூண்டிய வழக்கில், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று மாலை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியசிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் 21ம் தேதி ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,மீது, மேலும் இருவழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு செய்துள்ளனர்.

