ADDED : ஜூலை 23, 2024 08:44 PM
தி.மு.க., ஆட்சியில் அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களின் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அரிசி, பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, சாராயம், கஞ்சா போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. மரக்காணத்தில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி, இரண்டு கடிதங்களை டி.ஜி.பி.,க்கு எழுதியிருந்தார். அதில், மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கு தடையின்றி கிடைக்கும் மெத்தனாலை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலேயே கள்ளக்குறிச்சியில் மெத்தனால் குடித்து 67 பேர் இறந்துள்ளனர்.
விரைவில் பஸ் கட்டண அறிவிப்பு வெளியிட உள்ளனர். எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

