ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக சட்டசபை கூட்டம், தினமும் காலை மற்றும் மாலை நடக்கிறது. காலை மற்றும் மாலையில், இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
சட்டசபை அலுவல்களை விரைவாக முடிக்க வேண்டி இருப்பதால், விவாதத்தில் பேசும் உறுப்பினர்கள், தங்கள் பேச்சை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என, சபாநாயகர் அறிவுறுத்தினார்.
அதேபோல், அமைச்சர்கள் தங்கள் பதிலுரை மற்றும் துறை அறிவிப்புகளை, 15 நிமிடங்களுக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

