பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு ரூ.2 கோடியில் ரசாயன வர்ணம் உப்புக்காற்றில் துருப்பிடிக்காது
பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு ரூ.2 கோடியில் ரசாயன வர்ணம் உப்புக்காற்றில் துருப்பிடிக்காது
ADDED : ஆக 17, 2024 01:28 AM

ராமேஸ்வரம்:- ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரூ.2 கோடியில் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத ரசாயன வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் தற்போது பாலம் நடுவில் 650 டன் எடையுள்ள துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய துாக்கு பாலம் லிப்ட் முறையில் திறந்து மூட ஏதுவாக தொழில்நுட்ப கருவியுடன் பொருத்தும் பணி நடக்கிறது.
இந்நிலையில் பாம்பனில் வீசும் உப்புக்காற்றில் துாக்கு பாலம் மற்றும் தண்டவாளத்தை தாங்கி நிற்கும் இரும்பு கர்டர்கள் துருப்பிடிக்காத வகையில் ரூ.2 கோடியில் 'பாலிஷ் பிளாக்ஸின் மற்றும் ஜிங்மெட்டலைசின்' என்ற ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
இந்தப்பணிகள் இன்னும் 20 நாட்களுக்குள் முடிய வாய்ப்பு உள்ளது. இதன்பின் பாலத்தில் அடுத்தடுத்து ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தவும், திட்டமிட்டபடி அக்., 1ல் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.