தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்
தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்
ADDED : ஏப் 16, 2024 08:45 PM

திண்டுக்கல்:''திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது''என,திண்டுக்கல் எஸ்.பி.,டாக்டர் பிரதீப் கூறினார்.
அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய ராணுவ படையினர்,கேரளா போலீசார் என 4000 போலீசார் ஓட்டு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 60 இடங்கள் பதற்றமான ஓட்டு சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். அதுமட்டுமின்றி பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பணியில் இருப்பார்கள். 24 மணி நேரமும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
ஏப்.18,19 ல் ஓட்டுசாவடி மையங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இதேபோல் அரசியல் வாதிகளோடும் ஆலோசனை நடத்தி எதையெல்லாம் செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்ய கூடாது என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளோம். தேர்தல் விதி அமலுக்கு வந்ததிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுவை கட்டுப்படுத்துவதற்காக மது விலக்கு போலீசார் தீவிரமாக எல்லா பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து ஆய்வு செய்கின்றனர். டாஸ்மாக்குளில் அதிகளவில் மது பாட்டில்களை யாராவது வாங்கினால் அவர்கள் குறித்தும் தகவல் சொல்ல டாஸ்மாக் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

