டில்லியில் விழா தமிழகத்தை சேர்ந்த 23 பேர் பங்கேற்பு
டில்லியில் விழா தமிழகத்தை சேர்ந்த 23 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2024 12:13 AM
சென்னை:டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த, 23 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
சுதந்திர தின விழாவில், மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுதும், 6,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையைச் சேர்ந்த அருண்ராஜா; நீலமங்கலத்தைச் சேர்ந்த ஷகீலா தேவி ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கன்வாடி மைய அழைப்பாளர்களில், சென்னை திருவல்லிக்கேணி டெய்சிராணி; வியாசர்பாடி ஜெயகுமார்; புதுக்கோட்டை தேவமணி; சேலம் அந்தியூர் அம்மாப்பேட்டை சாந்தி; அடல் புத்தாக்க இயக்கப் பயனாளிகளான துாத்துக்குடி பிரார்த்தனா, சுபிக் ஷா, பாபு ராதாகிருஷ்ணன்.
விவசாயி உற்பத்தியாளர் அமைப்பின் சார்பில், கள்ளக்குறிச்சி வளர்மதி; சேலம் தலைவாசல் ஜோதி, மண்மலை லட்சுமி, தம்மம்பட்டி சசிகலா, மண்மங்கலத்துப்பட்டி சிவராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பஞ்சாயத்து தலைவர்களான கோவளம் ஷோபனா தங்கம்; கடலுார் நாற்றாமங்கலம் சுதா மணிரத்தினம்; திண்டுக்கல் போடிக்காமண்வாடி நாகலட்சுமி; கன்னியாகுமரி பீமனகாரி சஜிதா; துாத்துக்குடி நட்டாத்தி சுதாகலா; விழுப்புரம் தாயனுார் லாவண்யா; விருதுநகர் கட்டாங்குடி மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.