ADDED : ஏப் 19, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'டிமேட்' கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதம் இறுதி நிலவரப்படி 15.14 கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 32.25 சதவீத வளர்ச்சியாகும். கடந்த பிப்ரவரி இறுதியில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 14.82 கோடியாக இருந்தது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு தொடங்குவது அவசியம். பங்குச் சந்தைகளின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, சமீப காலமாக வர்த்தகம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டும் புதிதாக 31.30 லட்சம் பேர் டிமேட் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 30.70 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

