38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் திடீர் இட மாற்றம்: கோவை மற்றும் தேனிக்கு புதிய கலெக்டர்
38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் திடீர் இட மாற்றம்: கோவை மற்றும் தேனிக்கு புதிய கலெக்டர்
ADDED : பிப் 10, 2025 05:26 AM
சென்னை: கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள், பல்வேறு துறை செயலர்கள் உட்பட, 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்
மகேஸ்வரி - இயக்குனர் கால்நடை பராமரிப்பு - இயக்குனர், கைத்தறித் துறை
அண்ணாதுரை - மேலாண் இயக்குனர், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் - மேலாண் இயக்குனர், ஆவின்
வினீத் - மேலாண் இயக்குனர், ஆவின் - திட்ட இயக்குனர், தமிழக சுகாதார திட்டம்
கலையரசி - சிறப்பு செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை - சிறப்பு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
சுரேஷ் குமார் - சிறப்பு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - கமிஷனர், பிற்படுத்தப்பட்டோர் நலம்
ஆபிரகாம் - இயக்குனர், தொழில் கல்வி இயக்குனரகம் - கமிஷனர், வேளாண் வணிகம்
கிரண் குராலா - இயக்குனர், பேரூராட்சிகள் இயக்ககம் - மேலாண் இயக்குனர், தமிழக குடிநீர் வாரியம்
ஆல்பி ஜான் வர்கீஸ் - மேலாண் இயக்குனர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் - மேலாண் இயக்குனர், தமிழக மின்விசை உற்பத்தி கழகம்
அன்சுல் மிஸ்ரா - உறுப்பினர் செயலர், சி.எம்.டி.ஏ., - மேலாண் இயக்குனர், தமிழக நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
பிரபாகர் - மேலாண் இயக்குனர், தமிழக நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் - உறுப்பினர் செயலர், சி.எம்.டி.ஏ.,
கிராந்திகுமார் பாடி - கலெக்டர், கோவை - மேலாண் இயக்குனர், தமிழக திறன் மேம்பாட்டு கழகம்
பவன்குமார் கிரியப்பனவர், இணை செயலர், பொதுத்துறை - மாவட்ட கலெக்டர், கோவை
ரஞ்சித் சிங் - கமிஷனர், சேலம் மாநகராட்சி - கலெக்டர்,தேனி
ஷஜிவனா - கலெக்டர்,தேனி - கூடுதல் செயலர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்
நாராயண சர்மா - துணை கலெக்டர், செங்கல்பட்டு - திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு
சங்கத் பல்வந்த் வாகே - துணை கலெக்டர், பொன்னேரி - திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை
பொன்மணி - துணை கலெக்டர், மேட்டூர் - திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம்
கேத்தரின் சரண்யா - துணை கலெக்டர், பொள்ளாச்சி - திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தர்மபுரி
அர்பித் ஜெயின் - துணை கலெக்டர், சேரன்மாதேவி - திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஈரோடு
ஹர் சகாய் மீனா- செயலர், சிறப்பு முயற்சிகள் துறை - கமிஷனர், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகம்
மங்கத் ராம் சர்மா - செயலர், பொதுப்பணி - செயலர், நீர்வளம்
மதுமதி - செயலர், பள்ளிகல்வித்துறை - செயலர், மாற்றுத் திறனாளிகள் நலம்
சமயமூர்த்தி, செயலர், மனிதவள மேலாண்மை - செயலர், உயர்கல்வி
சத்யபிரதா சாஹு - செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் - செயலர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
ராதாகிருஷ்ணன் - செயலர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - தலைவர், தமிழக மின்வாரியம்
நந்தகுமார், தலைவர், தமிழக மின்வாரியம் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்
சுப்பையன் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் - செயலர், கால்நடை பரமரிப்பு, பால்வளம், மீன்வளம்
குமார் ஜெயந்த் - செயலர், தகவல் தொழில்நுட்பம் - செயலர், வணிகவரி மற்றும் பதிவு
பிரஜேந்திர நவ்நீத் - செயலர்,வணிகவரி மற்றும் பதிவு - செயலர், தகவல் தொழில்நுட்பம்
செந்தில்குமார் - செயலர், சுற்றுச்சூழல் - செயலர், மக்கள் நல்வாழ்வு
சுப்ரியா சாஹு - செயலர், மக்கள் நல்வாழ்வு - செயலர், சுற்றுச்சூழல்
சஜ்ஜன்சிங் ரா.சவான் - மத்திய அரசு அயல்பணி - சிறப்பு செயலர், பொதுத்துறை
மணிவாசன் - செயலர், நீர்வளம் - செயலர், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை
சந்திரமோகன் - செயலர், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை - செயலர், பள்ளிகல்வி
பிரகாஷ் - கமிஷனர், வேளாண் வணிகம் - செயலர், மனிதவள மேலாண்மை
கோபால் - செயலர், உயர்கல்வி - செயலர், சிறப்பு முயற்சிகள் துறை
வெங்கடேஷ் - கமிஷனர், பிற்படுத்தப்பட்டோர் நலம் - தலைவர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்
ஜெயகாந்தன், துணைத் தலைவர், தமிழக நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை - செயலர், பொதுப்பணி
***
முதல்முறையாக தமிழில் அறிவிப்பு
மாவட்ட கலெக்டர்கள், செயலர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட விபரங்கள், ஆங்கிலத்தில் வெளியிடப்படுவது வழக்கம். நேற்று, 38 அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு, முதல் முறையாக முழுமையாக தமிழில் வெளியிடப்பட்டு இருந்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு முன், தங்கள் துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்ற வேண்டும் என, முதல்வரிடம் பல அமைச்சர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு பிறகு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நிர்வாக வசதிக்காக, பல்வேறு துறைகளின் செயலர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். சுபமுகூர்த்த நாளான இன்று, புதிய பணியிடத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் பொறுப்பேற்க உள்ளனர்.
***