ADDED : ஜூலை 04, 2024 02:51 AM
மதுரை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரம் நான்கு நாட்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் எழும்பூரிலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு காலை 10:37 மணிக்கு மதுரை வரும். இங்கிருந்து 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) அதே நாட்களில் மதியம் 2:20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு மாலை 4:57 மணிக்கு மதுரை வரும். 5:00 மணிக்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு எழும்பூர் சென்று சேரும்.
8 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை பி.ஆர்.ஓ., செந்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.