ADDED : ஜூலை 12, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவிட மத்திய அரசு உத்தரவுப்படி, தேசிய, தனியார் வங்கிகள் வாயிலாக விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பயிர் கடன் பெறலாம்.
தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளன. உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், பலர் விண்ணப்பித்தும் விவசாய கடன் அட்டை பெற முடியாத நிலை உள்ளது.
நடப்பாண்டு இறுதிக்குள் பயிர் கடன் அட்டை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கையை, 50 லட்சமாக உயர்த்த, வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.

